தென்னிலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு நகரம் வெலிகமை. வயதுக்கு வந்த பெண்கள் பாடசாலைக் கல்வியை நிறுத்திக்கொள்ளும் வழமையை இங்கு இன்றும் பல குடும்பங்களில் காணலாம். இப்பெண்களுக்கு சன்மார்க்கக் கல்வியுடன் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கவில்லை. இக்குறையை நிவர்த்திக்க பலரும் அடிமனதில் ஆர்வமாக இருந்தனர். வெலிகம தாருல்முஃமினாத் நிறுவனமும் இந்த விடயத்தில் அக்கறையுடன் இருந்தது. அதன் விளைவாக மிக நீண்டகாலமாக தஃவா, சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் அல்இஹ்ஸான் நலன்புரிச் சங்கம், 2008 மார்ச் 2 (1429 ஸபர் 22) திகதி ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி என்ற இந்தக் கல்லூரியை ஆரம்பித்துவைத்தது.
இக்கல்லூரி ஆரம்பம் முதல் எட்டு வருடங்கள் வெலிகம வஜிரஞான வீதி இல.16ல் உள்ள ஒரு வாடகை வீட்டில் பல அசௌகாரியங்களுக்கு மத்தியில் இயங்கிவந்தது. அவ்வீட்டுக்கு முன்னால் 1100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு காணி வாங்கப்பட்டு 29-06-2013 ல் நடைபெற்ற இரண்டாவது பட்டமளிப்பு விழா தினத்தன்று பூரணத்துவமிக்க கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு அஸ்திவாரமிடப்பட்டது. தற்போது சகல வசதிகளுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் மூன்று பகுதிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதி 2017ல் நடைபெற்ற நான்காவது பட்டமளிப்பு விழாவின் போது திறந்து வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)