கல்லூரியின் பணிப்பாளராக அஷ்ஷைக் பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்கள் பணிபுரிகிறார். மௌலவிய்யா ஆயிசா மிகார்தீனின் தலைமையில் திறமையும் தகுதியும் வாய்ந்த ஒரு ஆசிரியர் குழு மாணவிகளுக்கான கல்வி போதனை, மற்றும் தர்பியாப் பயிற்சிகள் மிக அர்ப்பணத்துடன் மேற்கொண்டு வருகின்றது. அஷ்ஷைக் அஹ்மத் அப்பாஸி (எம். ஏ.), மௌலவியா ருஷ்கா ஸமீம், மௌலவியா பர்ஹானா அப்துர் ரஹ்மான், மௌலவியா பாதிமா பத்ஹுர் ரஹ்மான், மௌலவியா ஆயிஷா அமீன், மௌலவியா ஸாரா பாஸி, மிஸ்னா பய்ஸல் ஆகியோர் ஷரீஆப் பிரிவில் கடமை புரிகின்றனர். ஹிப்ளு பிரிவுக்குப் பொறுப்பாக மௌலவியா அஸாஹா நுஸ்ரத் இருப்பதுடன் அவருக்கு உதவியாக மௌலவியா கைருல் அப்ரார் ஸனுர்தீன் கடமை புரிகிறார். ஷரீஆக் கல்விப் போதனையில் பல தசாப்தகால அனுபவம் மிக்க அஷ்ஷைக் தீனுல் ஹஸன் (பஹ்ஜி), அஷ்ஷைக் பௌஸுர் ரஹ்மான் (பஹ்ஜி), அஷ்ஷைக் ளபர் (பஹ்ஜி, மதனி) ஆகிய உலமாக்களின் பகுதி நேர விரிவுரைகளின் வழிகாட்டலில் மாணவிகள் மேலதிக உயர் கல்வியைப் பெற்றுவருகின்றனர்.
சரீஆ பிரிவு மாணவிகள் மூன்றாம் ஆண்டில் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைக்கு தோற்றுகின்றனர். ஒவ்வொரு வருடமும் மேற்படி பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இப்பரீட்சைக்குரிய பாடங்களை பயிற்றப்பட்ட திறமைவாய்ந்த ஆசிரியைகள் மேற்கொள்கின்றனர்.
நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த சுமார் 140 மாணவிகள் இங்கு கல்வி பயில்கின்றனர். இங்கு கல்வி பயில விண்ணப்பங்கள் அதிகரிதக் கட்டிட மற்றும் இட வசதிகள் விஸ்தரிக்கப்படும் பட்சத்தில் மாணவிகளின் எண்ணிக்கையை மென்மேலும் அதிகரிக்க முடியும் என நம்புகிறோம்.